நடிகை பாவனா கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்திம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே படப்பிடிப்பு முடிந்து நடிகை பாவனா காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வழியில் காரை மறித்து ஏறிய மூன்று பேர், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனையடுத்து பாவனா அளித்த புகாரின் அடிப்படையில், கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், பல்சர் சுனில் உள்ளிட்டோரைப் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில், நடிகர் திலீப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர், கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நடிகர் திலீப், கொச்சி அங்கமாலி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவரின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை மாதம் 25ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் ஜாமின் கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நடிகர் திலீப் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : டிக்கெட் கட்டணம் – மக்கள் பக்கம் நிற்பது அரசா, போராடும் திரைத்துறையா?

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்