கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் சுமார் 9 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட வேண்டி இருக்கிறது. கேரளாவில் மீட்பு பணியின்போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகில் ஏற உதவியவர் கேரளாவைச் சேர்ந்த மீனவர் கேபி.ஜெய்சால். இவர் இன்று சமூக வலைத் தளங்களில் புது ஹீரோ. ஒரு உள்ளூர் மீனவரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் பலரின் இதயங்களை வென்றுள்ளது.

மலப்புரத்தில் வெங்காரா பகுதியில் கிட்டத்தட்ட இடுப்பு வரை இருக்கும் வெள்ளத்தில் வயதான 2 பெண்கள் , மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் மீட்பு படகில் ஏற தனது முதுகை படிகட்டாக பயன்படுத்த உதவியவர் 32 வயதான இந்த ஜெய்சால்.

மலப்புரத்தில் வெங்காரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சில பெண்கள் உதவிக் கேட்டுள்ளனர் அவர்களை என் டி ஆர் எஃப் (NDRF) வழிநடத்தும் மீட்பு குழுவால் மீட்க முடியாமல் போகவே எங்களிடம் தெரிவித்தனர். நாங்கள் என் டி ஆர் எஃப் மீட்பு குழுவிடம் படகை வாங்கி வந்து அப்பெண்களை மீட்டோம் என்று ஜெய்சால் நியூஸ் 18 (ஆங்கிலம்) சேனலிடம் போனில் தெரிவித்தார்.

ஜெய்சாலின் இந்த உதவி நாடு முழுவதும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்திருக்கிறது .சமூக வலைத் தளங்களில் ஜெய்சால்தான் இன்று ஹீரோ. இவரை நாட்டின் ஹீரோ, இந்த பெரும் பேரழிவில் சிறந்த மனித நேயத்தை இவர் வடிவில் பார்க்கிறோம் என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் இவரைப் பற்றிய பேச்சுக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here