கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோரை மீட்க வேண்டி இருக்கிறது.
சுமார் 10 லட்சம் பேர் அரசு சார்பிலான நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆகும். அதே போல சுமார் 17, 343 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். தற்பொழுது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள மழை வெள்ள பாதிப்புகளை அதிதீவிர பேரிடர் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மழை வெள்ள பாதிப்புகள் ‘அதிதீவிர பேரிடர்’ என்று அறிவிக்கப்படுகிறது. கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிய பேரிடர் என்று இது தீர்மானிக்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் பாதிப்புகளின் காரணமாக உண்டான சேதங்களை உள்ளடக்கிய, கேரள அரசின் அறிக்கையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்