கேரளாவில் அரசு மதுக்கடைகளில் பெண்களை வேலைக்கு நியமிக்கலாம் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மதுபானக் கடைகளில் பெண்களும் பணிபுரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு மதுக்கடை பணிகளில் ஆண், பெண் என பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகள் அரசுத் தேர்வுகள் எழுதலாம்

இதனிடையே, கேரள அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் திருநங்கைகளும் பங்குபெறலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Untitled

கேரள மாநிலம் எடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனு போஸ் என்பவர், கேரள அரசுப் பணியாளர் ஆணையம் நடத்தும் தேர்வுகளில் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஆண், பெண் என, இரண்டு பாலினத்தைத் தெரிவிப்பதற்கான வசதி மட்டுமே உள்ளதால் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும், தாங்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், மூன்றாம் பாலினத்தவர்கள் பெண்களுக்கான பிரிவில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெறலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்