சர்வதேச திரைப்பட திருவிழா. கேரளா

கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தேசிய கீதம் இசைத்த போது, எழுந்து நிற்காத இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை, அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ”நீதிமன்றங்களில் தேசிய கீதம்” : மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கன்னககுன்னு நிஷாகாந்தி திறந்த வெளிஅரங்கில் 21வது சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்று வருகிறது. இவ்விழாவில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. அப்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்காத 12 பேரை, தேசிய கீதத்தை அவமதித்தாகக் கூறி அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சென்னை:தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நிற்காதவர்கள் மீது தாக்குதல்

தேசிய கீதம் பாடிய போது எழுந்து நிற்காத 12 பேர் கைது
தேசிய கீதம் பாடிய போது எழுந்து நிற்காத 12 பேர் கைது

கடந்த நவம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம், திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்