கேரளா சகோதரிகள் பாலியல் வன்முறை வழக்கு ;ஜாமீனில் வெளியே வந்திருந்த குற்றவாளியை தாக்கிய பொதுமக்கள் (வீடியோ)

0
1931

கேளளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வயலார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி – பாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்தத் தம்பதியின் மூத்த மகள் 13 வயதுச் சிறுமி 2017-ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அது கொலை என்றும் இரண்டு நபர்கள் முகமூடியுடன் வந்து கொலை செய்து விட்டு சென்றதாகக் உயிரிழந்த சிறுமியின் தங்கை போலீசாரிடம்   கூறியுள்ளார். 

அந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்களிலேயே சிறுமியின் தங்கையும் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்தார். 

 பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமியின் அம்மா வழிவந்த உறவினர் மது மற்றும் தந்தையின் நண்பர் ஷிபு ஆகியோரை கைது செய்து போக்‌ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

மேலும் உறவினர் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சரியான தெளிவு இல்லாத காரணத்தால் வழக்கில் தொடர்புடைய சிலரை போலிஸார் விடுவித்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது போதிய முகாந்திரம் இல்லை என கேரள நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்தது.

குற்றவாளியான  குட்டி மது   இன்று அட்டப்பள்ளம் கடைவீதி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென வந்த 10 பேர் கொண்ட கும்பல் மதுவை தாக்க முயன்றுள்ளனர்.

இதனைப் பார்த்து பயத்தில் ஓடிய மதுவை, அந்த கும்பல் வளைத்து பிடித்து தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலின் போது வலி தாங்காமல் நிலைகுலைந்து மது கீழே விழுந்தார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த வாளையார் போலிஸார், மதுவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த வழக்கில் காவல்துறை முறையான விசாரணை நடத்தி ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரியாக வாதாடாததால் தான் சிறுமிகளை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமிகள் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் லதா ஜெயராஜ் என்பவரை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்க கேரள முதல்வர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

மேலும் இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், வயலார் வழக்கை விசாரித்த சில போலீசார் மீதும் நடவடிக்கை பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்திருந்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here