சர்கார் படம் வெளியாவதை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லத்தில் விஜய்க்கு 175 அடி உயர பிரமாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தமிழ்ப்பட ரசிகர்கள் அதிகம். மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் படங்கள் வெளியாகும் போது இருக்கும் கொண்டாட்டங்களைவிட தமிழ்ப் படங்கள் வெளியாகும் போது நடக்கும் கொண்டாட்டங்கள் சற்று அதிகம். விஜய், ரஜினி, சூர்யா படங்கள் வெளியாகும் போது போஸ்டர், கொடி, பேனர், செண்ட மேளம், பட்டாசு, கட்அவுட் என்று திரையரங்குகள் திருவிழாவாகும். விஜய் படங்களுக்கு இந்த கொண்டாட்டம் உச்சத்தை தொடும். விஜயக்கே தமிழ் நடிகர்களில் கேரளாவில் ரசிகர்கள் அதிகம்.

சர்கார் படம் கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் ஒரு மாதத்தக்கு முன்பே கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர். திரையரங்குகள் முதல்நாள் அதிகாலையிலிருந்து மறுநாள் அதிகாலைவரை மாரத்தான் காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

DrAQ0NjU4AAmKpq

கொல்லத்தைச் சேர்ந்த கொல்லம் நண்பன்ஸ் விஜய் ரசிகர்கள் 175 அடி உயரத்தில் விஜய்யின் பிரமாண்ட கட் அவுட்டை வைத்துள்ளனர். எந்த நடிகருக்கும் இப்படியொரு பிரமாண்ட கட்அவுட் வைக்கப்பட்டதில்லை. இதனை திறந்து வைத்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலுக்கு கூடுவதைவிட விஜய்க்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

https://twitter.com/KeralaVijayFC/status/1057844812215275520

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்