கேரளாவில் இன்று புதிதாக 1,298 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:

கேரளாவில்  புதிதாக 1,298 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 800 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 11,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.”

இதுபற்றிய அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயனும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் தெரிவித்துள்ளதன்படி:

இன்றைய பாதிப்பில் 78 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 170 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 1,017 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 76 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. 

கேரளாவில்  பல்வேறு மாவட்டங்களில் 1,48,039 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25,205 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here