கேரளா மாநிலம் கோட்டயம் அருகே எட்டுமானுார் என்னும் பகுதியிலுள்ள மகாதேவா கோவில் திருவிழா, திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்ட யானைக்குத் திடீரென மதம்பிடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் யானை மீது அமர்ந்திருந்த பாகனால் தப்பிக்க முடியவில்லை. எனினும் சிலர் சாதுர்யமாக அருகிலிருந்த கோயில் கோபுரத்திலிருந்து கயிறு மூலம் கட்டி பாகனைத் தூக்கி காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்