கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முலவுகாடு காவல் நிலையம், இயற்கை தோட்டப் பராமரிப்பில் முதன்மை வகித்து வருகிறது. மேலும் அம்மாநிலத்தின் பசுமையான காவல் நிலையமாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள் : யார் இந்த ஜாமினி ராய்?

எர்ணாகுளத்தில் உள்ள முலவுகாடு காவல் நிலையத்தில், இயற்கை காய்கறி தோட்டத்தை அமைத்து அதில் பல வகையான காய்களை நச்சுத்தனமை உள்ள எந்த உரங்களும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர். கேரள அரசு முன்னெடுத்துள்ள, ”ஹரிதா கேரளம்” திட்டத்தின் முயற்சியின் விளைவாக பசுமையான காவல் நிலையங்களாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. இதில் முலவுகாடு காவல்நிலையம் முதன்மையாக உள்ளது.

இதையும் படியுங்கள் : கிராம மக்களைக் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக 3 பேர் கைது

இது குறித்து பேசிய முலவுகாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுனு, “இந்த முயற்சி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மண்ணிற்கு ஏற்ற 27 வகையான காய்களைப் பயிரிட்டு வளர்த்து வருகிறோம். எங்கள் காவல்நிலையம் அமைந்துள்ள இடத்தின் அளவு 10 சென்ட். ஆனால் இதில் 27 வகை காய்கறிகள் பயிரிட செய்வதற்கு போதுமானதாகத் தோன்றவில்லை. இந்த தருணத்தில்தான் பஞ்சாய்த்து அதிகாரிகள் காவல்நிலையம் அருகே உள்ள 25 சென்ட் நிலத்தைக் காய்கறி தோட்டம் அமைக்க அனுமதித்து ஒதுக்கித் தந்தனர்.” என்றார்.

இதையும் படியுங்கள் : ”அகிலேஷ், முலாயம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அரசியலை மறந்துவிட வேண்டும்”

மேலும் பேசிய அவர், ”இதனால்தான் சில மாதங்களிலேயே வெறும் நிலமாக இருந்த இந்த இடத்தை எங்களால் அழகிய காய்கறி தோட்டமாக மாற்றமுடிந்தது. இதில் கிடைத்த தன்னம்பிக்கை மற்றும் பெருமையால்தான் கேரள முழுவதும் இயற்கை காய்கறிகள் கிடைக்க வேண்டும் என முடிவு செய்தேன். இந்த காய்கறி தோட்டங்கள் நல்ல உணவை தருவது மட்டுமின்றி எங்களின் வேலையில் உள்ள கோபம் மற்றும் இறுக்கத்தில் இருந்து விடுபடவும் செய்கிறது. இந்தக் காவல்நிலையத்தில் உள்ள 18 போலீசாரும் இணைந்து காய்கறி தோட்டத்தைப் பராமரித்து வருகிறோம். தற்போது இந்த தோட்டத்தில் விளையும் காய்கறிகளைத்தான் நாங்கள் இப்போது எங்களின் உணவிற்காகப் பயன்படுத்தி வருகிறோம். காவல்நிலையத்திற்கு அருகில் உள்ளவர்களும் இதனை எடுத்து சமைத்துக் கொள்கின்றனர். இதுவரை யாரையும் காய்களைப் பறிக்கக் கூடாது என தடுத்தது இல்லை”என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : தருண் விஜயைக் காப்பாற்ற முயற்சிக்கும் வெங்கையா நாயுடு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்