ஹிந்து மக்களை கவர நினைக்கும் பிஜேபியின் திட்டத்தை முறியடிக்க கேரளா முழுவதும் இராமாயண மாதம் கொண்டாட இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இராமாயணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூகப் பின்னணி குறித்த கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகளை மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி. மேலும், கோவில் குழு பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தி கேரள கோவில் குழுக்களை பாஜகவினர் அபகரிக்காமல் பாதுகாக்க திட்டமிட்டுள்ளது.

இராமாயண மாதம் கொண்டாடுவதன் மூலமாக மத விவகாரங்களிலிருந்து விலகியிருக்கும் தனது பழைய சித்தாந்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய மாற்றத்தை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.

நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக ஈடுபடாவிட்டாலும் சங்கிரித் சங் எனும் இடதுசாரி அமைப்பு அக்கட்சியின் சார்பில் இராமாயண மாத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.

ஜூலை 25 ஆம் தேதி, எழுத்தாளர் மற்றும் விமர்சகரான சுனில் பி. இளயிடம் அவர்களின் தலைமையில் ஆலப்புழையில் மாநில அளிவிலான கருத்தரங்கம் நடைபெறும். மாவட்ட அளவில் இராமாயணம் தொடர்பான சொற்பொழிவுகள் நடைபெறும்.

முன்னதாக, ஜன்மாஷ்டமிக்கு ஊர்வலம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சி தலைமையின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்த்தியது.