கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு

Kerala reported 5,376 new #COVID19 cases, 2,591 recovered cases & 20 deaths today.

0
329

கேரளத்தில் இன்று(புதன்கிழமை) புதிதாக 5,376 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல்சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை தொற்றுஉறுதியானவர்கள் எண்ணிக்கை  1,48,134 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,591 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 1,04,318 ஆகஉள்ளது. தற்போது 42,786 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கேரள முதல்வர் பிணராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here