சுவையான கேரட் தோசை எப்படி தயாரிக்கலாம்.. வாங்க தெரிந்து கொள்வோம்..

பச்சரிசி – 1/2 கப்,
இட்லி அரிசி – 1/2 கப்,
துருவிய கேரட் – 3/4 கப்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 6,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்.

கேரட் தோசை எப்படி தயாரிப்பது :

>இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

>இத்துடன் கேரட், சீரகம், மிளகு, காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

>தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள்.

>கடுகு தாளித்து மாவுடன் கலக்கவும்.

>தோசைக்கல் காய்ந்ததும் மாவை லேசான தோசைகளாக வார்த்து சிறிது எண்ணெய் விட்டு தோசையை மூடி வைத்து சுடவும்.

>ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here