கேதர் ஜாதவ்: “எத வேணாலும் மன்னிப்போம் ஆனா ஃபீல்டர்ஸ எண்ணின பாரு…” – சீறும் நெட்டிசன்கள்

Chennai Super Kings fans were particularly upset with Jadhav and Dhoni as the Men in Yellow choked against Kolkata Knight Riders, losing the match by 10 runs on Wednesday at Sheikh Zayed Stadium in Abu Dhabi.

0
285

முன்பு தமிழர்களால் உச்சி முகர கொண்டாடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியின் மூலம் நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க சிஎஸ்கே பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ்வின் பேட்டிங் சமூக ஊடகங்களில் கடும் நகைப்புக்கு உள்ளாகி உள்ளது.

கேதர் ஜாதவ் குறித்த கேலி மீம்கள் வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணியின் வெற்றி உறுதிபடுத்தப்படும் என்ற சூழலில், கேதர் மோசமான ஆட்டத்தால் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

சிஎஸ்கே அணியிலிருந்து கேதர் ஜாதவ்வை நீக்கும்படி Change.orgல் மனு ஒன்று சமர்பிக்கப்பட்டு அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர் என்றால் அவர் மீது ரசிகர்கள் எந்தளவுக்கு அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

மைதானத்துக்குள் நுழைந்த போது ஃபீல்டர்களை கணக்கெடுத்தது, போட்டி நடுவே பேட்டை மாற்றியது என கேதர் ஜாதவ்வை இணையத்தில் மீம்கள் மூலம் துவைத்தெடுக்கிறார்கள் ரசிகர்கள்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் சில மீம்களை இங்கே தொகுத்துள்ளோம்.

கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here