கேதர்நாத் குகையில் 5 ஸ்டார் வசதிகளுடன் ,ஏஎன்ஐ குழுவுடன் தியானம் செய்யும் மோடி

0
618

கேதார்நாத் குகைக்கோயிலில் மோடி தியானம் மேற்கொண்டார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், இமயமலையில் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாகவே பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.  தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இமயமலையில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் உத்தரகண்ட் மாநிலம் ஜோலிகிராண்ட் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் வந்து சேர்ந்தார்.

கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்திய அவர் பின்னர் அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.

கேதார்நாத் குகைக்கோயிலுக்கு நடந்து சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனார். பின்னர் பிரதமர் மோடி அங்கு தியானம் மேற்கொண்டார்.

இது குறித்து டிவிட்டரில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் . டிசைனர் வடிவமைத்த குகை? குகையில் பெட்ஷீட் , 5 ஸ்டார் வசதிகளுடன் ஏ என் ஐ குழுவுடன் மோடி என்று பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here