இந்திப் படம் கேதர்நாத் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இந்தி சினிமா ஆவலுடன் எதிர்பார்த்த பல படங்கள் தோல்வி கண்டன. முக்கியமாக தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். அதேநேரம் பதாய் ஹேn போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் பம்பர் ஹிட்டாகின. கதையும், திரைக்கதையுமே ஒரு படத்தின் வெற்றிக்கு மூலதனம் என நிரூபிக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தை இந்தி சினிமா அதிகம் எதிர்பார்க்கிறது. முதலில் கேதர்நாத், அடுத்து ஸீரோ, அதையடுத்து சிம்பா என மூன்று முக்கிய படங்கள் வெளியாகின்றன. இதில் கேதர்நாத் இன்று வெளியாகியுள்ளது . அதன் விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. படம் பார்வையாளர்களை கவர தவறிவிட்டது.

2013 இல் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னணில் கேதர்நாத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அந்த வெள்ளத்தில் கேதர்நாத் கோயில் மூழ்கியது நினைவிருக்கலாம். இந்து பெண்ணும், முஸ்லீம் இளைஞனும் காதலிப்பது இந்த வெள்ளப்பின்னணியில் சொல்லப்படுகிறது. முஸ்லீம் ஆண், இந்துப் பெண்ணை காதலிப்பதாக கதை இருப்பதால் இப்படம் லவ் ஜிகாத்தை ஆதரிக்கிறது என காங்கிரஸ், பாஜக மத அடிப்படைவாதிகள் எதிர்த்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், நடிகர் சைஃப் அலிகானின் மகள் (முதல் மனைவியின் மூலம் பிறந்தவர்) சாரா அலிகான் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

டிசம்பர் 21 வெளியாகும் ஷhருக்கானின் ஸீரோ படமும் சுமாராக இருப்பதாக ஏற்கனவே விமர்சனம் எழுந்தது முக்கியமானது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்