கேட்டை திறந்து வாழ்வு தந்த தமிழகம்.. அதை மூடி முடிக்கவும் தயங்காது.. ரஜினியை சீண்டும் திமுக எம்பி

0
491

இஸ்லாமியர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின்போது பெரும் தாக்குதல் நடந்துள்ளது.

போராட்டம் நடத்திய பெண்களை ஆண் காவலர்கள் அடித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில் குமார் ரஜினியை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் சில டிவீட்டுகளைப் போட்டுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல். எங்க @rajinikanth sir ஆள காணோம். Gateஅ திறந்து உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே gate அ மூடி, முடித்து வைக்கவும் தயங்காது என்று முதல் டிவீட்டில் கடுமையாக தாக்கியுள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து தமிழில் நடிகராக அறிமுகமான ரஜினியின் முதல் காட்சியே இரும்பு கேட்டை திறந்து உள்ளே வருவது போலத்தான். அதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளார் செந்தில் குமார்.

அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஓட்டு போடவில்லை , ஆனால் இணையத்தில் கபட நாடகம் எதற்கு? திமுக தூண்டுதலால் #இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை. திமுகவின் ஒரே கொள்கை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இதற்கு திமுகவைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பதில் கொடுத்துள்ளார். நீங்கள்ளாம் நியூஸ் பாலோ பண்றீங்களா இல்லை பிஜேபி சொல்றதை மட்டும் பாலோ பண்றீங்களா. சிஏஏ சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களிக்கலைன்னு உங்களுக்கு யார் சொன்னா. அது பொய்யின்னு நான் நிரூபிச்சுட்டா தும்பை பூ செடியில் தூக்குப் போட்டுத் தொங்கிருங்க,மானம் கெட்டவனுகளா என்று காட்டமாக பதிலளித்துள்ளார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here