கேட்டு வாங்கித்தரும் விஜய், கெட்டாலும் கண்டுகொள்ளாத அஜித்

0
283
Vijay & Ajith Kumar

பந்தா இல்லை, பண்பாளர், மனிதநேய மகாராஜா என்று அஜித்தைப் பற்றி சக கலைஞர்கள் வாய் கொள்ளாமல் பாராட்டினாலும் ஒருவிஷயத்தில் அஜித்தைவிட விஜய்யே பெட்டர் என்று முரசு கொட்டுகிறது கோடம்பாக்கம்.

இரண்டே படங்கள்தான் இயக்கினார் அட்லி. அவருக்கு மெர்சல் படத்தில் 11 கோடிகள் சம்பளம் (சிலர் 13 என்றும் சொல்கிறார்கள்) கேட்டு வாங்கித் தந்திருக்கிறார் விஜய். அட்லிக்கு மட்டுமில்லை உடன் பணியாற்றும் முக்கிய கலைஞர்களுக்கு தாராளமான சம்பளம் கிடைக்கிறதா என்பதில் விஜய் உறுதியாக இருப்பார். ஆனால் அஜித்?

அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பது தலயின் பாலிசி. வேதாளம் படத்தில் இயக்குனர் சிவாவுக்கு அரைகோடிக்கும் மேல் சம்பள பாக்கி. படம் ஹிட்டாகியும் பாக்கி சிவாவின் பாக்கெட்டுக்கு வரவில்லை. விஷயம் அஜித் காதுக்குப் போன பிறகும் பேலன்சை செட்டில் செய்ய எந்த முனைப்பும் காட்டவில்லை அவர்.

விவேகத்தில் சிவாவுக்கு பேசப்பட்டது 12 கோடி சம்பளம். அதில் இன்னும் 3 கோடி செட்டில் செய்யப்படவில்லை என்று முணுமுணுக்கிறது ஸ்டுடியோ வட்டாரம். படம் ஓபனிங்கில் அள்ளி குவித்த பிறகும் பேலன்சை கிள்ளிக் கொடுக்க தயாரிப்பு தரப்பு தயங்குகிறது. விஷயம் அஜித் காதுக்குப் போனாலும் கண்டு கொள்ள மாட்டார் என்பதாலேயே இந்த இழுபறி என்கிறார்கள்.

அடுத்தவீட்டுப் பிரச்சனையை எட்டிப் பார்க்காமல் இருப்பது நல்ல விஷயம்தான். அதுக்காக அணுகுண்டே விழுந்தாலும் அசைய மாட்டேன் என்பது நியாயமா நியாயம்மாரே…?

இதையும் படியுங்கள் : விவேகம் – விமர்சனம்

இதையும் படியுங்கள் : வெளிநாட்டு வேலைக்குச் செல்லும்போது எந்த விவரங்களைக் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும்?

இதையும் படியுங்கள் : ”மாடுகளை நேசிப்பதுபோல மனிதர்களையும் நேசியுங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்