கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் கலவரம் வெடித்தது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. டெல்லியில் நேற்று பேட்டி அளித்த அமித் ஷா, ‘கொல்கத்தா கலவரத்துக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம்’ என்று குற்றம்சாட்டியிருந்தார். 

மேலும், கலவரம் தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா 3 புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

ஆனால், வன்முறை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக பல்வேறு வீடியோ ஆதாரங்களை மம்தா பானர்ஜி வெளியிட்டு பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். இதுவரை, பாஜகவுக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொருட்களை உடைப்பது, கட்டிடங்களை தாக்குவது, கல்லூரியை சேதப்படுத்துவது என அனைத்தும் பதிவாகி உள்ளது. அதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பினர்,’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறிக்கொண்டே வாகனங்களுக்கு தீ வைக்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது. ஆனால் இதைதான் திரிணாமுல் தீ வைத்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. 

இது மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலையையும் உடைத்து சேதப்படுத்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.
இந்த வன்முறையைகளைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது புரொபைலில் வித்யாசாகர் படத்தை வைத்துள்ளனர். இதுவும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவையும்எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளது. தத்துவ மேதை வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் உடைத்ததை, மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக திரிணாமுல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை மேற்கொள்ளவும் முடிவெடுத்திருப்பதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

திரிணாமுல் மீது பழி வரும் என பாஜக நினைத்த நிலையில் தற்போது நிலைமை அதற்கு எதிராக திரும்பியுள்ளது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here