டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி மாநில தலைமைச் செயலகம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவால் பயன்படுத்தும் நீலநிற வேகன்-ஆர் கார் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, இந்த காரில் சென்றுதான் கெஜ்ரிவால் வாக்குகள் சேகரித்தார். டெல்லி தலைமைச் செயலகம் அருகே, அதுவும் முதல்வரின் கார் திருட்டுப் போயுள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்