தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இந்தத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. அவ்வாறு நடத்தப்பட்டால் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் எனவும் கூறப்பட்டது. அதேசமயம் தேர்தல் பணிகளை கவனிக்க கூடுதல் தேர்தல் அதிகாரிகள் தேவைப்படுவார்கள் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பேரின் பணிக்காலம் ஓராண்டுக்கு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எம்.பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக இருந்தவர். ஐஏஎஸ் ராஜாராமன் மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக பணியாற்றி வந்தவர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here