பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அபினந்தன் 151 சலுகை ரூ. 151 விலையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகைக்கான பலன்களை அந்நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் அபினந்தன் சலுகையில் 500 எம்.பி. டேட்டா தினமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இனி அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 1.5 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். முன்னதாக இச்சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் இதில் 50 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

500 எம்.பி. டேட்டா தவிர அபினந்தன் 151 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. ஜியோ ரூ. 149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். முன்னதாக பி.எஸ்.என்.எல். தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். அபினந்தன் 151 பிரீபெயிட் சலுகை ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. ரூ. 151 விலையில் அறிவிக்கப்பட்ட இச்சலுகையில் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

புதிய மாற்றத்தின் பிறகும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே இச்சலுகையை தேர்வு செய்து பயன்படுத்துவோருக்கும் கூடுதல் பலன்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)