பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று அதிரடியாக அறிவித்தது. அத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்தது. புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

பிறகு மத்திய ரிசர்வ் வங்கி ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 ரூபாய் நோட்டுகளில் புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

நவம்பர் 2016 முதல் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.முன்பு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடுகையில் இவை அளவு மற்றும் வடிவமைப்பில் வேறுபடுகின்றன.

ரிசர்வ் வங்கியின் ஆவணப்படி, மார்ச் 31, 2016 ஆம் ஆண்டில் 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது மார்ச் 2018 வாக்கில் சுமார் 10 பில்லியன்களானது. இது இரு மடங்கு அதிகமாகும்.

இந்நிலையில் தற்போது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here