கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

Google has been prototyping technology for foldable phones, but don't expect a folding version of the search giant's flagship Pixel phone or its cheaper Pixel 3A anytime soon.

0
174

கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் மேலாளர் மேரியா கியூரோஸ் தெரிவித்து இருந்தார்.

மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியான  நிலையில் இந்த மாடலின் சரியான பயன்பாடு பற்றி தெளிவற்ற சூழல் நிலவுவதாக கூகுள் தெரிவித்து இருந்தது.

தற்சமயம் இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் ரேவென் மற்றும் ஒரியோள் எனும் குறியீட்டு பெயர்களில் பிக்சல் 6 வேரியண்ட்கள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Google-Pixel-Fold-0000

இவற்றுடன் பார்பெட் மற்றும் பாஸ்போர்ட்என்ற பெயர்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருகின்றன. இதில் பார்பெட் பெயரில் உருவாகும் மாடல் பிக்சல் 5ஏ என்றும் பாஸ்போர்ட் பெயரில் உருவாகும் மாடல் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.  

பிக்சல் 6, பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் இறுதி காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும். பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் 2021 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், இந்த மாடல் வெளியாக ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என தெரிகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here