கூகுள் சிஇஓ பணியிடம் காலியாக இருப்பதாக லிங்டுஇன் பக்கத்தில் மைக்ரோசாஃப்ட் சார்பில் செய்யப்பட்டிருந்த விளம்பரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதோடு மட்டுமல்ல, பலரது கனவு பணியாக இருக்கும் அந்த பதவி காலியானால் சும்மா இருப்பார்களா? இதை பார்த்த பலர் தங்களது விவரங்களை அதில் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் போலியாக பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மிட்செல் ரிஜெண்டர்ஸ் என்பவர் தான் போலியான தகவலை பதிவை செய்துள்ளார். வேலைவாய்ப்பிற்காக அதிகமானோர் பயன்படுத்தும் இந்த வலைதளத்தில் அதிகாரப்பூர்வமற்ற நிறுவனங்களை சேர்ந்த பலரும் போலியான தகவலை பதிவிட்டு வருவதாகவும், இதனை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்ற குரல்களும் பல நாட்களாக ஒலித்து வருகிறது.

பணம் செலுத்தி பயன்படுத்தி வரும் இந்த லிங்டுதின் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் பொய்யான தகவல்களை அளித்து, பயனாளர்களின் முக்கிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை இந்த விளம்பரம் மூலம் நிரூபித்துள்ளார் மைக்கோல் ரிஜின்டர்.உடனடியாக அந்தப் பதிவை லிங்டுதின் நீக்கிவிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here