கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுல் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது 19வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாக செயல்படும் இந்நிறுவனம் உலகின் தேடுபொறி தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. உலகில் உள்ள ஏறக்குறை 100க்கும் மேற்பட்ட மொழிகளில் கூகுள் தளம் செயல்பட்டு வருகிறது.

google

இந்நிறுவனம் 19வது பிறந்தநாளை முன்னிட்டு 19 ஸ்பின்னர்ஸ் விளையாட்டுகளைக் கொண்டு சிறப்பித்துள்ளது. கூகுள் முகப்பில் கிளிக் செய்த பின்னர், சர்பிரைஸ் ஸ்பின்னர் தோன்றும், அதில் உள்ள “spin again” என்பதனைக் கிளிக் செய்து அதில் தோன்றும் விளையாட்டினை விளையாடலாம். அல்லது மீண்டும் ’spin again’ என்பதனைக் கிளிக் செய்து வேறொரு விளையாட்டை விளையாடலாம்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு : https://www.google.com/logos/2017/cricket17/cricket17.html ; பாம்பு விளையாட்டுக்கு : https://goo.gl/cyXjbr ; ஹிப்ஹாப் இசை விளையாட்டுக்கு: https://www.google.com/logos/2017/hiphop/hiphop17.html என 19 வகையான விளையாட்டுகளை விளையாடலாம்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்