(November 30, 2015)

”திரும்பும்போது பாத்து திரும்பு”, “அடுப்படிக்கு போகாத, போனா தாய்ப்பால் வத்திடும்”, “பப்பாளி சாப்பிடாதே”, என ஏகப்பட்ட அன்பு கட்டளைகள் பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கும் சேர்த்து சில நிபந்தனைகள் பெரியவர்களால் வழங்கப்படும். இதில் எதனை கடைபிடிக்க வேண்டும், எதனை அறவே ஒதுக்க வேண்டும் என்பதில் குழப்பங்கள் நீடிக்கின்றன. பெண்கள் ‘நவீனமாக’, ‘மேற்கத்திய’ முறைக்கு ஏற்றபடி தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார்கள். என்றாலும், கர்ப்பம், குழந்தை வளர்ப்பு என்பதில் காலத்திற்கு ஏற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. உங்கள் அம்மாவுக்கு உங்களுடைய பாட்டி சொன்ன பழக்கவழக்கங்கள் பிடிக்காது, உங்களுக்கு உங்கள் அம்மா சொல்வது பிடிக்காது. இது தொடரும், ஆனால், அதை அலசி ஆராய்ந்து எதனை ஏற்க வேண்டும், எதனை ஏற்க கூடாது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் நம் சூழல், மதம், சாதி, பண்பாடு, கலாச்சாரம் என எல்லாமே பிண்ணிப்பிணைந்துள்ளது.

’ஃபார் பம்பியர் டைம்ஸ்’ (For Bumpier Times) என்ற குழந்தை வளர்ப்பு நூலில், லஷ்மி ராமநாதன் (இதழியலாளர், எழுத்தாளர்) இந்த பிரச்சனைகளை களைய முற்பட்டிருக்கிறார். அவரிடம் சில உரையாடல்கள்:
IMG_2471

கர்ப்பம், குழந்தை வளர்ப்பு இதைப்பற்றி எழுத வேண்டும் என ஏன் தோன்றியது?

”நான் கர்ப்பமாக இருந்தப்ப எனக்கும் இந்த மாதிரி நிறைய அட்வைஸ் பன்னுவாங்க. நம்முடைய இந்திய சமூகத்தில் கர்ப்பமா இருக்குறப்ப அட்வைஸ் சொல்றது ரொம்ப பொதுவானது. ஏன்னா அவங்க பயப்படுவாங்க. அந்த பயத்துல இருந்து எப்படி வெளியில வரணும்னு எனக்கு தோணுச்சு. படுத்துட்டு உடனேயே எந்திருக்கும் போது தொப்புள் கொடி குழந்தையோட கழுத்தை சுத்திக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு காரம், ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். ஆனால், அது சாப்புட்டா குழந்தை கண் தெரியாம போயிடும்னு பயமுறுத்துவாங்க. இந்த பயமே வேண்டாம். அதனாலதான் இந்த புத்தகம் என்னோட அனுபவங்கள், பெற்றோர்களின் நேர்காணல், மருத்துவர்கள், நிபுணர்களின் ஆலோசனையோடு எழுதியுள்ளேன்.

குழந்தை வளர்ப்பிலும் சில பயமுறுத்தல்கள் இருக்குமே? அதெல்லாம் என்ன?

அடுப்படுக்கு போனால் தாய்ப்பால் வத்திடும்-னு சொல்லுவாங்க. என்னோட குழந்தை சீக்கிரமாவே நடக்க ஆரம்பிச்சுட்டா. குழந்தை சீக்கிரமா நடந்துட்டா ஸ்பைன் வளைஞ்சிடும்னு தேவையில்லாத பயத்தை உருவாக்குவாங்க.

இன்றைய ’நவீன’ அறிவியலுக்கும், நம்முடைய கலாச்சாரத்துக்கும் உள்ள இடைவெளியை கண்டறிய நினைத்திருக்கிறீர்களா?

மருத்துவர்கள் சொல்வது ஒரு மாதிரி இருக்கும். நம்முடைய பழக்கவழக்கங்கள் சொல்வது ஒரு மாதிரி இருக்கும். வீட்டில் அம்மா, மாமியார் சொல்வது ஒன்னு. அதை, டாக்டர் செய்ய்வே கூடாதுன்னு சொல்லுவாங்க. இதெல்லாம் என்ன? இந்த குழப்பத்தை தீர்க்கணும்னுதான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கேன்.

இந்த புத்தகம் யாரெல்லாம் படிக்கணும்?

பெரியவர்கள் சொல்றதை கடைபிடிக்க சுத்தமா நேரம் இல்லாதவங்க, சில தாய்மார்கள் முழுதாக பெரியவர்கள் சொல்லும் பழக்கவழக்கங்களில் மூழ்கியிருப்பாங்க, அவங்க ரெண்டு தரப்புக்கும் இந்த புத்தகம் தேவையில்லை. இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்க இந்த புத்தகத்தை படிக்கலாம்.

எல்லா கர்ப்பமான பெண்களுக்கும் ஒரே மாதிரியான உணவுபழக்கத்தை திணிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

எல்லாருடைய உடம்பும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. நான் கர்ப்பமாக இருந்தப்ப ரொம்ப ‘நாசி’யா ஃபீல் பண்ணேன். அப்ப அதை தடுக்குற உணவை நான் எடுத்துக்கிட்டேன். இதை நம்ம எல்லோருக்கும் சொல்ல முடியாதே. பப்பாளி சாப்பிட்டா கரு கலைஞ்சிடும் =னு சொல்லுவாங்க. ஆனால், அது ரொம்ப காயாக இருக்குற பப்பாளியைத்தான் சாப்பிடக் கூடாது. ஆனால், நம்ம எல்லாத்தையும் வேஸ்ட் பண்ண மாட்டோம். எல்லாத்தையும் சாப்பிடணும்னு சொல்லுவாங்க. அதனாலதான், பொதுவா பப்பாளியே சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

குழந்தை வளர்ப்பில் என்னென்ன பழக்கவழக்கங்கள் தவறானதாக உள்ளது?

உத்திரபிரதேசத்தில் ‘பான்’ மசாலாவில் சேர்க்கப்படும் ‘கஸ்தா மசாலாவை’ குழந்தையோட உதட்டில் தேய்க்குறாங்க. அப்படி செஞ்சா உதடு ரோஸ் ஆகும்னு நினைக்குறாங்க. ஆனால், அது நிரந்தரமா மாறாது. இது குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். ஒரு வயசு குழந்தைக்கு எதுவுமே செய்யக்கூடாது.

கர்ப்பமாக இருக்குறப்ப, வயிற்றில் நெய் தேய்க்கணும்னு சொல்லுவாங்க. இது ஆயுர்வேதத்தில் இருக்கு. ஆனால், ரொம்ப டீப்பா தேய்க்க கூடாது. சூடாயிடும் உடம்பு. 3 டீஸ்பூன்ஸ் தேய்க்கலாம்.

பல மாநிலங்களில் பிறந்த குழந்தைக்கு மார்பில் இருக்குற பாலை தேய்ச்சி எடுப்பாங்க. இது ரொம்ப கெடுதல். அப்படி செய்யும்போது இன்ஃபெக்‌ஷன் ஆகும். சில நல்ல திசுக்கள் சேதமாகும். இதை சரிசெய்ய ப்ரெஸ்ட் கேப்சூல் ரிமூவல் செய்றாங்க இப்படி நிறைய குழந்தைகள் ஹாஸ்பிட்டலுக்கு வர்றாங்க. . இப்படி செய்யவே கூடாது. அந்த பால் தானாகவே வத்திடும். நம்ம எதுவுமே செய்ய வேணாம்.

சூடான தண்ணியில் குளிப்பாட்ட கூடாது. குழந்தை தன்னிலையை மறந்துடும். அதனால தாங்குற அளவுதான் குழந்தைக்கு தண்ணி ஊத்தணும்.

வட மாநிலங்களில் மேட்டி லட்டுன்னு ஒண்ணு செய்றாங்க. அது குழந்தை பிறந்தவுடன் அந்த தாய்க்கு 4,5 லட்டுக்களை தொடர்ந்து ஊட்டுவாங்க. இது உண்மையிலேயே அறிவியல் பூர்வமாக தாய்ப்பால் ஊர்றதுக்கு ரொம்ப உதவியா இருக்கு. அந்த மாதிரி பெரியவங சொல்றதுல பல பயன்களும் இருக்கு.

ஆனால், பெரியவங்க சொல்றதுல சிலது ரொம்ப நல்லது. தமிழ்நாட்டில் வெள்ளிக்கிண்ணத்தில் சாப்பாடு ஊட்டணும்னு சொல்லுவாங்க. ஆனால், இப்ப இருக்குற தாய்மார்கள் அது கெடுதியோன்னு நினைக்குறாங்க. ஆனால், வெள்ளி நல்ல உலோகம். சுத்தப்படுத்துற தன்மை இருக்கு. இந்த மாதிரி சில நல்ல விசயங்களும் இருக்கு.

பெரியவங்க சொல்றதுல சில பழக்கங்களில் எதெல்லாம் கடைபிடிக்கணும், எதை செய்யவே கூடாது, எதிலெல்லாம் சில மாற்றங்களை செய்யணும்னு சொல்லுது இந்த ‘ஃபார் பம்பியர் டைமிங்’. இனிமேல் என்ன ஹாப்பியா குழந்தை பெத்துக்க வேண்டியதுதானே.

இந்த புத்தகங்கள் சென்னையில் ஒடிசி, ஹிகின்ஸ்பாதம்ஸ் கடைகளில் கிடைக்கும். இணைய வணிகத்தளமான அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகியவற்றிலும் கிடைக்கும்.

ஃபிலிப்கார்ட்டில் வாங்குவதற்கு

அமேசானில் வாங்குவதற்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here