ஒடிசாவில் மனநலம் பாதித்த சகோதரர்கள் இருவரை, குழந்ததைத் திருடர்கள் எனக் கூறி மரக்கம்பத்தில் கட்டி வைத்து, பொதுமக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒடிசா மாநிலம் பரிபடா என்னும் பகுதியில், இரு சகோதரர்கள் கையில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சகோதரர்கள், தாங்கள் வந்த பாதையை மறந்து விட்டதால், அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். இதனைக் கண்ட கிராமத்தினர், குழந்தைத் திருடர்கள் என நினைத்து, சகோதரர்கள் இருவரை, கம்பத்தில் கட்டி வைத்து, கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

beat

இதனையறிந்து சகோதரர்கள் இருவரை மீட்க வந்த அவரது தந்தையையும் கிராமத்தினர் கடுமையாகத் தாக்கினர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : லவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்