குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 குழந்தைகள் பெற்றுகொள்ள வேண்டும் – பாஜக எம் எல் ஏ

0
201

கடவுள் ராமனே வந்தாலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களை தடுக்க முடியாது என்று கூறிய உத்தரபிரதேச பாஜக எம் எல் ஏ சுரேந்திரா சிங் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதில் சிறந்தவர். மீண்டும் ஒரு முறை சர்ர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கிறார். இந்த முறை அவர் கூறியது இந்து தம்பதியர்கள் 5 குழந்தைகளைப் பெற்று இந்துத்துவாவை வளர்க்க வேண்டும். குழந்தைகள் கடவுளின் பிரசாதம்.

ஒவ்வொரு இந்துவும் குறைந்தபட்சம் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண்கள் குழந்தைகளும், கூடுதலாக ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சமநிலைத் தன்மையை கடைப்பிடிக்காவிட்டால், இந்தியாவில், இந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். இந்துக்கள் வலிமையாக இருக்கும்போதுதான் இந்தியா வலிமையாக இருக்கும். இந்துக்கள் பலவீனமடையும்போது, இந்தியாவும் பலவீனமடையும்.

இந்துக்களின் செயல்பாடுகளால்தான் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள் என்று சுரேந்தர் சிங் தெரிவித்தார்.

முதல்வர் ஆதித்யநாத் வெளிப்படைத்தன்மையுடைய நிர்வாகத்தை அளிக்காததால், பாஜக தோற்றது என்று உத்தரப்பிரதேசத்தில் கைரானா, நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக தோல்வியைச் சந்தித்த போது கூறினார்.

பாரத மாதாக்கு ஜெய் என்று கூறாதவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று கூறியவரும் இவரே. விபச்சாரம் செய்பவர்கள் அரசு ஊழியர்களைவிட மேலானவர்கள் என்றும் கடவுள் ராமரின் அவதாரமே பிரதமர் மோடி என்றும் பாலியல் வன்முறைக்கு மொபைல் ஃபோன்களேக் காரணம் என்றெல்லாம் கூறியவரும் இவரேதான்

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here