குழந்தைகளைக் குதூகலிக்க வரும் ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ படம்

0
424

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் விருப்பத்துக்குரிய, ஆங்கிரி பேர்ட்ஸ் வீடியோ கேம் இப்போது திரைப்படமாக தயாராகி வருகிறது. குழந்தைகளுக்கு இந்தப் படம் ஒரு சிறப்பு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆங்கிரி பேர்ட்ஸின் பிறப்பிடம் பின்லாந்த். ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கிய பின்லாந்தின், ரோவியோ என்டர்டெய்ன்மெண்ட், சோனி பிக்சர்ஸ் இமேஜ் வொர்க்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. 3டி கம்ப்யூட்டர் அனிமேட்டட் திரைப்படமாக இது உருவாகிறது.

பின்லாந்தில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் 2014 -இல் வெளியான, ‘பிக் கேம்’ திரைப்படமே அதிக பொருட்செலவில் எடுத்தது. தோராயமாக 8.5 மில்லியன் யூரோக்கள். ஆங்கிரி பேர்ட்ஸ் திரைப்படத்தின் பட்ஜெட், இந்தப் படத்தைப் போல் சுமாராக பத்து மடங்குகள் அதிகம். தவிர 100 மில்லியன் யூரோக்கள் விளம்பரத்துக்கு செலவிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதற்குமுன் பறவைகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில், ‘ரியோ’ என்ற அனிமேஷன் திரைப்படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ‘ரியோ’ முதல் பாகம் 90 மில்லியன் டாலர்களில் தயாராகி உலகம் முழுவதும், 484 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ‘ரியோ’வைவிட ஆங்கிரி பேர்ட்ஸ் உலகம் முழுவதும் பிரபலம். அதனால் படத்தின் பட்ஜெட்டையும், அதன் விளம்பரச் செலவையும் ஆங்கிரி பேர்ட்ஸ் எளிதாக வசூலித்துவிடும்.

2016 மே 20 -ஆம் தேதி கோடை விடுமுறையில், த ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி வெளியாகிறது. சூப்பர்ஹீரோக்களை அடுத்து, குழந்தைகள் விரும்பும் அனிமேஷன் படங்களே உலக அளவில் அதிக வரவேற்பையும், வசூலையும் பெறுகின்றன. அதற்கான சான்றுதான், ஆங்கிரி போட்ஸ் படமும், அதன் பிரமாண்ட பட்ஜெட்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்