குழந்தைகளைக் கடத்தியதற்காக இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

0
474

ஜனவரி 9, 2016இல் நடைபெற்ற தேடும் பணியில் பீகாரைச் சேர்ந்த 219 சிறுவர்கள் பழைய நகரின் தளப் கட்டா பகுதியிலுள்ள வளையல் தொழிற்சாலைகளில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த வளையல் தொழிற்சாலை நடத்திவந்த இருவருக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை கடத்தி அத்தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக வைத்து ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் நாலந்தாவைச் சேர்ந்த மோட் இம்தியாஜ் (40) மற்றும் கயாவைச் சேர்ந்த முன்னா (28) ஆகியோருக்கு கூடுதல் பெருநகர குற்றவியல் அமர்வு நீதிபதி என். வி. இம்மானுவேல் அவர்களால் புதன்கிழமை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 9, 2016இல் நடைபெற்ற தேடும் பணியில் பீகாரைச் சேர்ந்த 219 சிறுவர்கள் பழைய நகரின் ஹைதராபாத் , தளப் கட்டா பகுதியிலுள்ள வளையல் தொழிற்சாலைகளில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரமான சூழலில் அச்சிறுவர்கள் வேலை செய்து வந்ததாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு பீகாரிலுள்ள பெற்றோரிடம் அச்சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here