குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதில் பெற்றோர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். உணவில் புரதம் மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளை உறுதியாக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் புரதம் பெரிதும் உதவுகிறது. 10 முதல் 20 சதவிகித கலோரிகள் புரதத்தில் இருந்து உடலுக்கு கிடைத்துவிடுகின்றன. ஓவ்வொரு வயதினருக்கும் எவ்வளவு புரதம் தேவைப்படும் என்பது குறித்த அட்டவணையை பார்ப்போம்.

news 2.001

புரதம் நிறைந்த காய்கறிகள்
ப்ரோக்கோலி

எப்போதுமே குழந்தைகளுக்கு காய்கறிகளை சாப்பிட விரும்புவதில்லை. ப்ரோக்கோலியில் புரதம் நிறைந்திருக்கிறது. ப்ரோக்கோலி மற்றும் சீஸ் பராத்தா, ப்ரோக்கோலி கட்லெட்ஸ், சிப்ஸ், க்ரீமி ப்ரோக்கோலி டிப் ஆகிய ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம். ஒரு டம்ளர் ப்ரோக்கோலி ஸ்டாக்கில் நான்கு கிராம் புரதம் நிறைந்துள்ளது.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ருசியானதும் கூட. ஒரு கப் பச்சை பட்டாணியில் எட்டு கிராம் புரதம் நிறைந்துள்ளது.

வெண்டைக்காய்

ஒரு கப் வெண்டைக்காயில் இரண்டு கிராம் புரதம் நிறைந்துள்ளது. வெண்டைக்காய் வழுவழு தன்மை கொண்டதால் குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள். அதனால் வெண்டைக்காயை மொருமொருப்பாக செய்து கொடுக்கலாம்.

மஷ்ரூம்

ஒரு கப் மஷ்ரூமில் மூன்று கிராம் புரதம் நிறைந்துள்ளது. மஷ்ரூமை சிறு துண்டுகளாக்கி சீஸ் அல்லது உருளைக்கிழங்கு சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் சாப்பிட ஐந்து கிராம் புரதம் கிடைத்துவிடும். உருளைக்கிழங்கை வறுப்பதை விட வேகவைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.

மக்காச்சோளம்

ஒரு மக்காச்சோளத்தில் ஐந்து கிராம் புரதம் உள்ளது. இதனை சாண்ட்விச், பாஸ்தா, நூடில்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாகவும் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

courtesy: Ndtv