குளிர்காலத்தில் பயணங்கள் மேற்கொள்வது மற்றும் இளைப்பாறுதல்களை மட்டுமே எதிர்பார்த்திராமல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவதையும் முக்கியமாக கருத வேண்டும். ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது. வெயில் காலத்தில் நமக்கு அதிகப்படியாக வியர்வை வெளியேறும் என்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படும். ஆனால் குளிர்காலத்தில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு நீர் குடிப்பதும், உடலில் நீரை தக்க வைத்து கொள்வதும் முக்கியமான ஒன்று. குளிர்கால காற்றானது நம் சருமம், கூந்தல் மற்றும் உடலிலும் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். உடலில் நீரிழப்பை தடுக்கும் சில எளிய வழிகளை பார்ப்போம்.
Healthy Lifestyle And Food. Woman Drinking Fruit Water. Detox. H

நீர் அருந்துவதன் நன்மைகள் சில
உடல் வெப்பத்தை சீராக வைக்க:

கோடை மற்றும் குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். உடலுக்கு தேவையான வெப்பம் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே ஹைப்போதெர்மியா போன்ற நோய்கள் வராமல் இருக்கும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று உடலின் ஆற்றலை குறைத்து உங்களை மந்தமாக செய்யும். உடலுக்கு தேவையான நீர்ச்சத்து சீராக இருந்தால் மட்டுமே காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் உங்களை நெருங்காது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

உடல் எடையை சீராக வைத்திருக்க:

உடல் நீரேற்றத்துடன் இருக்கும் போது கொழுப்புகளை எளிதாகவும் விரைவாகவும் உடைக்கும் திறன் பெற்றிருக்கும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு:

சருமம் சுருக்கங்களற்று ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான் எல்லா அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
bittermelontea
குளிர்காலத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை
வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள்: குளிர்காலத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துவது மிகவும் நல்லது. ஏனென்றால் குளிர்ந்த நீரை உடல் வேகமாக உறிஞ்சிவிடும். வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்: ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, அன்னாசி, கீரை, செலரி, தக்காளி, கேரட், வெள்ளரி போன்ற காய்கறி பழங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

கஃபைன் மற்றும் மதுவை குறைக்க வேண்டும்: குளிர்காலத்தில் சூடான தேநீர், காபி மற்றும் மதுபானம் உடலில் வெப்பத்தை தக்கவைப்பதாய் இருந்தாலும், இவை உங்கள் உடலிலுள்ள நீர்ச்சத்தை குறைத்துவிடும். ஆகவே கஃபைன் மற்றும் மது இரண்டையும் தவிர்த்திடுங்கள்.

சூப் மற்றும் சாலட் சாப்பிடலாம்: சூப் மற்றும் சாலட்களில் உப்பு சத்து நிறைந்திருப்பதால், அது உங்கள் உடலில் நீரை தக்கவைக்கும். மேலும் உள்ளிருந்து உங்கள் உடலை உள்ளிருந்து வெப்பமடைய செய்யும்.