இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள புதிய 3 ஜிபி ரேம் ரெட்மி நோட் 8 மாடலின் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் கிடைக்கும் தன்மை என்ன? மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது இதன் அம்சங்களில் ஏதேனு மாற்றங்கள் உள்ளதா? வாருங்கள் அலசலாம்!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி அதன் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் மொத்தம் இரண்டு வேரியண்ட்களின் கீழ் அறிமுகப்படுத்தியது. அதாவது அடிப்படை மாடல் ஆன 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் டாப்-எண்ட் மாடல் ஆன 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆகும்.

ரெட்மி நோட் 8 ஸ்மார்போனின் இந்த இரண்டு மாடல்களுமே தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் இந்த ஸ்மார்ட்போன்களின் தேவை சற்று அதிகமாகவே உள்ளது. அதை புரிந்துகொண்ட சியோமி நிறுவனம், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் புதிய மெமரி வேரியண்ட் ஆன 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளியான 91மொபைல்ஸ் அறிக்கையின்படி, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ஆனது ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,799 என்று நிர்ணயம் செய்யப்படும், இந்த அளவிலான விலை நிர்ணயம் ஆனது மற்ற ரெட்மி நோட் 8 மாடல்களை விட மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவூட்டும் வண்ணம், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ .9,999 க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ஆனது ரூ.12,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த இரண்டுமே (4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பதிப்புகள்) ஆஃப்லைன் மற்றும் பிளாஷ் சேல் வழியாக ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்க கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் இந்த புதிய மாறுபாடு ஆனது ரேம் மற்றும் சேமிப்பகத்தின் அடிப்படையில் மட்டுமே மற்ற மாறுபாடுகளில் இருந்து வேறுபடுகிறது. இது 6.40 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கமும் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8 ஆனது 2.0 கிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் உடனாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவும் உண்டு. ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் Android 10 க்கு மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்புற பேனலில், கைரேகை சென்சார் உள்ளது உடன் க்வாட் கேமரா அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் + 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் ஒரு 13MP செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது இது யூ.எஸ்.பி டைப் சி ஆதரவுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here