முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில், பெரிய திரையுடன் கூடிய நவீன 4ஜி போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜியோ நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதுபோலவே நவீன வசதிகளுடன் கூடிய பட்ஜெட் போனையும் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த போன்களின் திரை பெரிய அளவில் இல்லாமலும், தொடுதிரை இல்லாமலும் இருந்ததால் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனது.

இதனால் நவீன வசதிகளுடன் கூடிய புதிய 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிளெக்ஸூடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

 இதன் மூலம் குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன், பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் சந்தைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக 10 கோடி போன்களை தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here