மேற்கு வங்கத்தில் நிதி நிறுவன மோசடி வழக்குகளில், மேற்குவங்கத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான சிபிஐயின் நடவடிக்கையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக நீடிக்கிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் முகுல்ராய் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ டேப்பில் பேசியிருப்பது சிபிஐ யின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விகுறியாக்கியுள்ளது.

(First published by the Bengali daily Ananda Bazaar Patrika ) இந்த ஆடியோ டேப் முதன்முதலாக ஆனந்த் பஜார் பத்திரிகையில் அக்டோபர் 2018, இல் வெளியிடப்பட்டது.இந்த ஆடியோ டேப்பில் பாஜக தலைவர் (முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் – நிதிநிறுவன மோசடிகளில் முக்கிய குற்றவாளி-பின்னர் பாஜகவில் இணைந்தார்) முகுல் ராய் மேற்கு வங்க பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விடம் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க 2 மத்திய அரசு அதிகாரிகளை மேற்கு வங்கத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

அந்த உரையாடல் ஹிந்தி மொழியில் இருக்கிறது.

*மத்துவா சமுதாயத்தினரிடம் பேச யாரவது தலைவர்கள் இருக்கிறார்களா?

விஜய்வர்கியா ; நான் அமித் ஷாவை கூடிய சீக்கிரம் சந்திக்க இருக்கிறேன் அவரிடம் ஏதாவது கூறவேண்டுமா?

முகுல் ராய் ; சிபிஐ யால் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை கண்காணிக்க முடியுமா? (ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல்) அவ்வாறு செய்தால் மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகள் கேடர் பயப்படும் .

இந்த தொலைபேசி உரையாடல் அப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பேசப்பட்டு வந்தது. அக்டோபர் 2018 இல் முகுல் ராய் தனது தொலைப்பேசி உரையாடல்களை சட்டத்துக்கு புறம்பாக மாநில அரசு ஒட்டு கேட்பதாக கூறினார். .

மேலும் இந்த முகுல் ராய் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் நிதி நிறுவன மோசடியில் முக்கிய குற்றவாளி. முகுல்ராய் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் தலைவர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் . 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தற்போது காவிகட்சி பாஜகவுக்கு தேர்தல் திட்டமிடுதலில் வழிகாட்டுகிறார்.

அந்த ஆடியோ டேப்பில் இருந்த உரையாடல் இதுதான்

விஜய்வர்கியா ; நான் அமித் ஷாவை கூடிய சீக்கிரம் சந்திக்க இருக்கிறேன் அவரிடம் ஏதாவது கூறவேண்டுமா?

முகுல் ராய் ; சிபிஐ யால் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை கண்காணிக்க முடியுமா? (ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல்) அவ்வாறு செய்தால் மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகள் கேடர் பயப்படும் . 2 மத்திய அரசு அதிகாரிகளை மேற்கு வங்கத்துக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும். மேற்கு வங்க வருமான வரி துறை அலுவலகத்தில் இயக்குநர் (விசாரணை) , கூடுதல் இயக்குநர் (விசாரணை) நியமிக்க கூறுங்கள். என் மனதில் 2 பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை நான் உங்களுக்கு தருகிறேன். நீங்கள் பாருங்கள்

நான் சஞ்சய் சிங்குடன் தொடர்பில்தான் இருக்கிறேன்

விஜய்வர்கியா ; எந்த சஞ்சய் சிங்?

முகுல்ராய் ; சஞ்சய் , உங்களை அவர் சந்திப்பார்

விஜய்வர்கியா ; அந்த இருவரின் பெயர்கள் எனக்கு மெசேஜ் பண்ணுங்க. அவர்களை எங்கு , எந்த அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்பதையும் எனக்கு அனுப்புங்கள்.

அந்த ஆடியோ டேப்பின் நம்பகத்தன்மை ஆய்வு செய்யப்படவில்லை. அந்த ஆடியோ டேப்பில் பேசியது உண்மையானதாக இருந்தால் சிபிஐயின் மீதுள்ள நம்பகத்தன்மை கேள்விகுறியாகியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் நிறுவனத்தின் நற்பெயருக்கு மிகவும் ஆபத்து .

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் , மத்திய அரசுக்குக்கும் மோதல் போக்கு இருக்கும் நிலையில் இந்த ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வலம் வருகிறது. இந்த ஆடியோ டேப் குறித்து சமூக ஆர்வலர் மற்றும் பிரதான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முகுல்ராய் பேசுவதை கவனியுங்கள். நிதிநிறுவன மோசடிகளில் முக்கியமான குற்றவாளி இவர் . பாஜகவில் இணைந்துவிட்ட இவர் விஜய்வர்கியாவுடன் பேசும் போது அமித் ஷாவுடன் பேசி சிபிஐ, வருமான வரித்துறை, ஆகியோருடன் இணைந்து மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்கிறார்.

courtesy : The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here