குரூப் 1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்

0
394

2020ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

2018 -19ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதே சமயத்தில் 2020ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 

குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை 2020 ஜனவரி மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்திருந்த நிலையில், வருகிற ஜனவரி 20ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி 19ம் தேதி என்றும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த விரிவான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here