தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, அந்த கோவிலை கடந்த ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது யூடியூப்பில் கணினி வரைகலை உதவியுடன் வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா, சிஷ்ய கோடிகளுக்கு தன் சிற்றறிவுக்கு எட்டியதை அருளுரையாக வழங்கி வருகிறார்.

அந்தவகையில் புதன்கிழமை வெளியிட்ட அருளுரையில் மேட்டூர் அணையில் நீருக்கு அடியில் உள்ள சிவன் கோவில் குறித்தும், அந்த கோவிலின் பழமையான மூலலிங்கம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி அவரிடம் உள்ள பழமையான மூல லிங்கத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

அதே போல அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது குரு நாதர் ராம் சுரத்குமார் போல எந்த நடிகரும் ஸ்டைலாக புகைபிடிக்க முடியாது என்று கூறிஉள்ள நித்தி, தனது குருநாதர் புகைப் பிடித்தால் அருகில் நிற்கும் நாய் புகைவிடும் என்று அளந்துவிட்டதுதான் நித்தி அருளுரையின் உச்சக்கட்ட காமெடி.

Courtesy: polimernews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here