கும்பல் வன்முறை மேற்கத்திய கலாச்சாரம்; இந்தியாவை அவமதிக்காதீர்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

0
136

கும்பல் வன்முறை  (MobLynching) என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றும், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேட்டுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது-

இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கும்பல் தாக்குதல் என்பது மேற்கத்திய கலாசாரம். அதனை இங்கு கடைபிடித்து இந்தியாவிக்கு அவமானப் பெயரை தேடித் தரக் கூடாது. 

ஒரு சமூக மக்கள் இன்னொரு சமூக மக்களை குறி வைத்து தாக்குவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஒரு குறிப்பட்ட சமூக மக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவதும் தவறானது. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படலாம். 

கும்பல் கொலை சம்பவங்கள் நம் நாட்டிற்கும், இந்து சமூகத்திற்கும் அவமானத்தை தேடி தந்துள்ளன. அது இன்னொரு சமூக மக்கள் மத்தியில் பயத்தை விதைத்துள்ளது. நிச்சயமாக கும்பலாக தாக்குதல் (Lynching) என்பது இந்தியாவுடன் தொடர்புடையது கிடையாது. 

நாட்டு மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சமூக மாண்புகளுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்திய ஜனநாயகம் சிறப்பு மிக்க பாரம்பரியத்தை கொண்டது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் அதற்கு சான்றாகும். 

ஜனநாயகம் என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. அது இங்கேயே பல நூற்றாண்டுகளாக கட்டிக் காக்கப்பட்டது. 
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.