குதிரைப் பந்தயத்துக்கு ஜிஎஸ்டி விதிக்க்கபடும் என்பதற்கு பதிலாக குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கபடும் என்ற நிதியமைச்சர்…கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
205

குதிரைப் பந்தயத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதற்கு பதிலாக குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கபடும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததற்கு இணைய வாசிகளும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.

47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. முன்னதாக காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பின்னர் சண்டிகருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு, ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. குதிரை பந்தயம், கேளிக்கைகள் (கேசினோ) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

குதிரைப் பந்தயத்துக்கு ஜிஎஸ்டி விதிக்க்கபடும் என்பதற்கு குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கபடும் என்ற  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனை எதிர்க்கட்சிகளும் நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறும்போது, “நிர்மலா சீதாராமன்ஜிக்கு வாக்குப்பெட்டி வெளியே சிந்திக்கும் திறன் இருந்தது எனக்குத் தெரியும்” என்று கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸின் ஊடகப் பிரிவு செயலாளர் வினீத் புனியா  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நிதியமைச்சரின் காணொளியைப் பகிர்ந்து, “குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கும் நிர்மலா சீதாராமன்ஜியின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here