குடியுரிமை திருத்த மசோதா; பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தும் அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம்

0
363

குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்த அமித்ஷா மற்றும் இந்த சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த முக்கிய தலைவர்கள்  மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார், அதை 311 உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர், அதற்கு எதிராக 80 வாக்களித்தனர், இப்போது அதன் ஒப்புதலுக்காக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த  திருத்தப்பட்ட  சட்டத்தின்படி, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு  வந்துள்ள இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு, சட்டவிரோத குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்கள் இடம் பெறவில்லை. அதேபோல், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள் பற்றி எந்த கருத்தும் கூறப்படவில்லை.

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) (USCIRF)மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படுவது குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகக் கூறி இருக்கிறது .மேலும் நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்த சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த முக்கிய தலைவர்களின் நடவடிக்கையால் இந்தியா மீது  பொருளாதாரத் தடை அறிவிக்க அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த குடியுரிமை  திருத்த மசோதாவில் இஸ்லாமியர்களை மட்டும் தனித்துவிட்டுள்ளார்கள். மதம் அடிப்படையில் குடியுரிமை என்று கொண்டுவந்துள்ளார்கள். இது ஆபத்தான பாதை பயணத்தில் ஆபத்தான திருப்பம் ஆகும். இது இந்தியாவின் செழுமைமிக்க மதச்சார்பற்ற தன்மைக்கும் சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்று சொல்லும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானதாகும். மனித உரிமை மற்றும் மதச் சதந்திரத்துக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது அமெரிக்க அரசு குறிப்பாக அமெரிக்க ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது 

 https://www.uscirf.gov/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here