குடியுரிமை திருத்த சட்டம் ; பாகுபாடு காட்டுவதாக கூறி 48 நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகல்

0
358

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 48 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும் பாஜகவில் ஜனநாயகம் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். குடியுரிமை திருத்த சட்டம்  மற்றும் என் ஆர் சிக்கு எதிராக   நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பாஜக கடுமையாக போராடி வருகிறது. இப்போது கட்சியிலும் அதனால் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள கட்சியின் சிறுபான்மை பிரிவினைச் சேர்ந்த 48 பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரச்சனை எழுப்பி பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். 

கட்சியில் விலகிய தலைவர்கள் கட்சிக்குள் பாகுபாடு காட்டுவதாகவும், கட்சி உறுப்பினர்கள் ஒரு சமூகத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

போபாலின் பாஜக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆதில்கான், ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் ஒரு அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு, பின்னர் வீடு வீடாகச் சென்று ஆதரவைக் கோருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என கேட்டுள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய பிரச்சனைக்காக சனிக்கிழமை ஆதில்கான் பதவி விலகினார். 

3 பேரின் ஆதிக்கத்தில் பாஜக கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்கள் மாநில சிறுபான்மைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பாஜக முன்பு ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றியது, பாகுபாட்டில் ஈடுபடவில்லை, சிறுபான்மையினர் உட்பட அனைவரையும் அரவணைத்தது . இப்போது அப்படி இல்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.

கட்சியில் இருந்து விலகிய தலைவர்கள் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முழு கட்சியும் இரண்டு அல்லது மூன்று நபர்களால் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் அவர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here