குடியுரிமை சட்ட திருத்த மசோதா அடிப்படையில் அரசியலமைப்பிற்கு முரணானது- சசி தரூர்

0
349

குடியுரிமை திருத்த மசோதா அடிப்படையில் அரசியலமைப்பிற்கு முரணானது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேசியுள்ளார். 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்த  மசோதாவை மத்திய அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. 

இது குறித்து மக்களவையில் பேசிய சசி தரூர் இந்த மசோதா அடிப்படையில் அரசியலமைப்பிற்கு முரணானது. ஏனெனில் இதில் இந்தியாவின் அடிப்படை நோக்கங்கள் மீறப்பட்டுள்ளன. நாங்கள் எப்போதும் எங்கள் சிந்தனைகள் என்பது மகாத்மா காந்தி, நேரு, மவுலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வாதிட்டு இருக்கிறோம். ஆதலால், மதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது.

நம்முடைய நாடு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது. மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் தேசம். அதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால், இந்த மசோதா, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைக் குறைத்து மதிப்பிடுகிறது என்று தாக்கி பேசினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here