குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை – ரஜினிகாந்த்

#Rajinikanth backs #CAA. #NRC procedure yet to be formulated. #NPR is necessary and required.

0
175

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். மேலும் பேசிய அவர், ”நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் செய்யவில்லை. சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றனர்என்றார்.

என்பிஆர் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல்
வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை என அவர்மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here