குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் ராஜஸ்தான் அரசு வழக்கு

The Rajasthan government on Monday moved the Supreme Court challenging the Citizenship Amendment Act (CAA). Notably, Chief Minister Ashok Gehlot has time and again attacked the Centre over the legislation.

0
164

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள மாநிலத்திலும் உட்பட் சில மாநிலங்களின் சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதி மன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இரண்டாவதாக, மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறுவதாக சுட்டிக்காட்டி ராஜஸ்தான் அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் இன்று(திங்கள்கிழமை) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதவிர, காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here