கொரோனா பேரிடரில் இருந்து நாடு விடுபட்ட பிறகு , குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதில் பின்வாங்குவது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அமித்ஷா நெட்வொர்க் 18 குழுமத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, வேளாண் சட்டங்கள், உத்தரப் பிரதேச தேர்தல், குடியுரிமை சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமித் ஷா பேசினார். அவர் பேசிய முக்கிய விவகாரங்கள் குறித்து பார்ப்போம்.
உத்தரப் பிரதேச தேர்தல்: பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது பாஜகவுக்கு நல்ல பலனை தரும்.
இந்தத் தேர்தலில் பாஜக 230- 260 இடங்களைப் பெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுகின்றன. 2017ல் 238 இடங்கள் என்று கணிக்கப்பட்டது, நாங்கள் 325 இடங்களை வென்றோம்.
முன்பு ஒரு அரசு ஒரு ஜாதிக்காகவும், இன்னொரு அரசு இன்னொரு ஜாதிக்காகவும் உழைத்தார்கள். சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது குறிப்பிட்ட மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துகொண்டனர். விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் கால்நடைகளை கவர்ந்து சென்றனர். தற்போது மாஃபியா கும்பல்களிடம் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்கள் இரவிலும் ஸ்கூட்டியில் செல்கின்றனர். உபி தற்போது பாதுகாப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்:👇
தீவிரவாதம்: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் POTA, UAPA போன்ற பிரிவில் பதியப்பட்ட 11 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும். POTA மற்றும் UAPA வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, வாக்கு வங்கியின் காரணமாக வழக்கு பிரிவுகளை நீக்குகின்றனர். இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்கு வங்கி இல்லையா?
பயங்கரவாத வழக்குகளில் கூட இந்த இருகட்சிகளும் சமாதானப்படுத்துவதில் ஈடுபடுகின்றன.
இஸ்லாமியர்களுடனான பாஜகவின் உறவு: ஒரு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மற்றும் ஒரு பொறுப்பான அரசியல் கட்சிக்கும் அதன் குடிமகனுக்கும் இடையே இருக்க வேண்டிய அதே உறவுதான் உள்ளது. ஆனால் தேர்தலில் யார் வாக்களிக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இது உதவியற்ற தன்மையல்ல. அரசியல் ஆசாரம். அரசியலமைப்பின் படி அரசு செயல்படுகிறது.
ஹிஜாப் விவகாரம்: அனைத்து மதத்தினரும் பள்ளி ஆடைக் குறியீட்டைப் பின்பற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
The Campus Front of India: அவர்களின் நோக்கம் வெற்றியடையாது என்று என்னால் சொல்ல முடியும்… நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, மக்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்.
சாதி அரசியல்: 2019 இல் 4 கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டன. ஆனால் நாங்கள் 64 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றோம், அரசியல் இப்படி இயங்காது
2022ல் பிரதமரின் தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் வருவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பகுஜன் சமாஜ்: அவர்கள் வாக்குகளை பெறுவார்கள். ஆனால் நாங்கள் ஆட்சி அமைக்க யாருடைய தயவும் தேவையில்லை.
விவசாயிகள்: விவசாயிகள் எங்களுடன் உள்ளனர். வேளாண் சட்டங்கள் அமல்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைப் போல ஒரு கண்ணோட்டம் உருவாக்கப்பட்டன. ஆனால் அது வெற்றி அடையவில்லை.
பாலகோட்: ராகுல் காந்திக்கு இந்தியாவின் வரலாறு தெரியாது. 62ல் என்ன நடந்தது? உரி மற்றும் பாலகோட் விவகாரத்தில் இந்தியா தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. ராகுல் காந்தி எந்த நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் சீனாவுடன் பேசி வருகிறார்.
பஞ்சாப் தேர்தல்: பஞ்சாபில் மிகவும் விசித்திரமான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம்.
கோவா: பாஜக ஆட்சி அமைக்கும். கடந்த முறை பெற்றதை விட அதிக இடங்களில் வெற்றிபெறுவோம்.
குடியுரிமை சட்டத் திருத்தம்: கொரோனா பேரிடரில் இருந்து நாடு விடுபட்ட பிறகு , குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . இதில் பின்வாங்குவது குறித்த பேச்சுக்கே இடமில்லை .
……………………………………………….
………………………………………………
Courtesy: news18