குடியரிமை சட்டத் திருத்த மசோதா ; மோடியும், அமித் ஷாவும் கூட ஊடுருவியவர்கள்தான்; கொதித்தெழுந்த பாஜகவினர்

0
464

 பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி கூறியதால், மக்களவையில்  வாக்குவாதம் ஏற்பட்டது. சௌதரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

குடியரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2 நாள்களாக ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து  பேசிய அதிர் ரஞ்சன் சௌத்ரி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது பாரபட்சமானது. இது முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்.

குடியேறியவர்களைக்  கணக்கிட்டால், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டெல்லியில் ஊடுருவியிருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் மக்களவையில் திங்கள்கிழமை சர்ச்சையானது . அவையில் உருக்குத் துறை தொடர்பாக கேள்வி கேட்பதற்கு அதிர் ரஞ்சன் எழுந்த போது பாஜகவினர் அவரை  ‘ஊடுருவல்காரார்’ (infiltrator) என்று கோஷமிட்டனர். இதையடுத்து, அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆம், நான் ஊடுருவல்காரன்தான், நான் கரையான் புற்றுதான்’ என்று கூறினார். அத்துடன் நிறுத்தாமல், ‘மோடி ஓர் ஊடுருவல்காரர், அமித் ஷா ஓர் ஊடுருவல்காரர்,, அத்வானி ஓர் ஊடுருவல்காரர், என்று அதிர் ரஞ்சன் பதிலளித்தார்.  அதற்கு, ‘உங்களது விளக்கங்களை நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்’ என்று தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

இதையடுத்து, அதிர் ரஞ்சன் சௌதரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி கோஷிமிட்டனர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் (சோனியா காந்தி) ஓர் ஊடுருவல்காரர். எனவே, அவரைப் போலவே மற்றவர்களையும் பார்க்கிறார்கள்’ என்றார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போதுதான் மோடி, அமித் ஷா ஆகியோரைப் பற்றிக் குறப்பிட்டேன். எனது பதில் திருப்தி அளிக்காவிட்டால் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன். நம்மிடம் பல ஆவணங்கள் இல்லாத நிலையில், நம்மை ஊடுருவல்காரர் என்று யாராவது அழைத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்றார் அதிர் ரஞ்சன் சௌதரி. இவரது குடும்பம் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here