நாடு முழுவதும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தமிழக அரசு இந்த ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளன.

இதுதவிர பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் இரவு ரோந்துகளிலும், வாகன தணிக்கையிலும் போலீசார் அதிகம் ஈடுபடவுள்ளனர்.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீசாரும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக வரும் 31ஆ ம் தேதி நள்ளிரவு வரை பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு, அங்கும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்