குஜராத் RTI சமூக செயல்பாட்டாளர் கொலை; முன்னாள் பாஜக எம்பி உள்பட 7 பேர் குற்றவாளி

0
464

RTI சமூக ஆர்வலர் அமித் ஜெத்வாவை கொன்ற வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. உள்பட ஆறு பேரை குற்றவாளிகள் என அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிர் காட்டு பகுதியில் சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடப்பதை வெளியேக் கொண்டு வந்ததற்காக RTI சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா கொல்லப்பட்டார்.  

தண்டனை குறித்த  விவரங்கள்  ஜூலை  11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சிறப்பு சிபிஐ நீதிபதி கே எம் தேவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாஜக எம்.பி. தினு போகா சோலன்கி, சிவா சோலன்கி, சஞ்சய் சவுகான், சைலேஷ் பாண்டியா, பச்சன் தேசாய், உதய் தாகூர் மற்றும் போலீசு கான்ஸ்டபிள் பகாதுர்சின் வாதெர் உள்ளிட்டவர்கள் மீது கொலை, கொலை சதி, சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கே. எம். தேவ் அறிவித்துள்ளார்.

RTI சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து , ஜூலை, 20, 2010 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டவிரோதமாக கிர் வனப்பகுதியில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த முன்னாள் பாஜக எம்பி டினு சோலங்கியை பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக வெளிக் கொண்டு வந்தார் RTI சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா.   

இதனைத் தொடர்ந்து டினு சோலங்கியின் சுரங்கத் தொழில் பாதிப்படைந்திருக்கிறது . 

இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே பகுதியான கிர் வனப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத் தொழில் நடத்தப்படுவது குறித்து பொதுநலன் வழக்கு ஒன்றை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் RTI சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா. 2010-ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அமித் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னாள் பாஜக எம்பி டினு சோலன்கி, தன்னுடைய உறவினரான சிவா சோலன்கியின் பெயரில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதும், அமித்தின் நடவடிக்கைகளால் சுரங்கத் தொழில் முடங்கியதும் கொலைக்கான பின்னணி காரணங்கள் என சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி டினு சோலன்கி குற்றச்சாட்டிலிருந்து தப்பிவந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்தது . 

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறைக்கும் அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி என அமித்தின் தந்தை பிகாபாய் ஜெத்வா கருத்து தெரிவித்துள்ளார். இது நீதி அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அநியாயக்காரர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளார் அவர்.

முன்னதாக,  குற்றவாளி டினு சோலங்கி கொடுத்த அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக இந்த வழக்கிலிருந்து 105 சாட்சியங்கள் பின்வாங்கினர் இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம்  வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது . 

thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here