குஜராத் சட்டப்பேரவையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டே வருகிறது.

குஜராத் மாநிலத்தைப் பொருத்தவரையில் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10 சதவிகிதமாகவுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர். கடந்த 1980ஆம் ஆண்டில் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 17 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 12 பேர் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராயினர். அதனைத்தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 11 பேர் போட்டியிட்டு மூன்று பேர் மட்டுமே வெற்றிபெற்றிருந்தனர். தற்போதைய சட்டப்பேரவையில் ஒரு சதவிகிதம் மட்டுமே முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர்.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிச.9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிச.18ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் படேல் சமூகத்தினர் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருப்பதால் இந்தத் தேர்தல் களம் பரபரப்புடன் உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்